Tuesday, November 1, 2011

மழை நீர் நம் உயிர் நீர்

மனித உயிர் வாழ நீர் ஓர் முக்கியமான தேவை. ஒவ்வொரு வருடமும் மழை நன்றாகதான் பெய்கிறது ஆனால் அனைத்தும் அப்படியே கடலில் தான் போய்  கலக்கிறது. அரசாங்கத்திடம்  பாலிதீன் (polythene ) பைகளை தடை செய்யும் துணிவு இல்லை, மேலும் மக்களும் அதை தவிர்க்க தயார் இல்லை. விளைவு நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க முடியவில்லை. 

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

இன்று ஒரு செய்தியில் நான் கண்ட காட்சி என்னைக்கொஞ்சம்  யோசிக்க வைத்தது, ஒரு சிறிய பள்ளியில் 32 மாணவர்களுக்கு பதில் இப்போது 10 பேர் தான் படிக்க வருகிறார்கள் என்று காட்டும் போது சில சிறுவர்களையும் காட்டினார்கள் அவர்கள் கிழிந்த உடையும் அழுக்கு தலையும் கொண்டிருந்தனர். இந்தியாவின் ஆட்சியாளர்களின் அலுவலக பதிவுகளையும் திட்டங்களையும் ஆராய்ந்து பார்த்தால் மிக சிறந்த திட்டங்களை கொண்டிருக்கும் ஆனால் எவையும் ஒழுங்காக மக்களை சென்று சேரவில்லை காரணம் சுயநலமிக்க ஆட்சியாளர்கள் அவர்களுக்கு பயந்த,பணிந்த மற்றும் சுயநலமும் சுயலாபமும் கொண்ட அதிகாரிகள். இப்போது உள்ள சுதந்திர தாகம் என்று தணியுமோ