Wednesday, May 27, 2009

கண்ணை திறந்து இருக்கும்போது வந்த கனவுகள்

மனிதன்
இயற்கைக்கு எதிராக அனைத்தையும் செய்துவிட்டு
இயற்கை மட்டும் அதன் வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும் என எதிர் பார்க்கும் இனம்.

என் எண்ணங்களில் சில

கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ்

வந்தாரை வாழ வைக்கும தமிழகம்

இன்னும் பல பெருமைகளை கொண்ட தமிழினம் என்ன செய்து கொண்டு இருக்கிறது

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத தண்ணீர் பிரச்சனை

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத நதி நீர் இணைப்பு

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத மின் பற்றாக்குறை

இப்படி பல குறைகள் ஆனாலும் நாட்களும் நகருகிறது அரசும் ஆட்சி புரிகிறது

உங்களில் எதனை பேர் உங்கள் வாக்கை பயன் படுத்த வில்லை தெரியுமா... மனித இனத்தின் மிகபெரிய பிரச்சனை அன்றாட வாழ்க்கை தான் எனவே தான் உங்கள் அன்றாட பிரச்சனையை மனதில் வைத்து உங்கள் வாக்குகளை நீங்கள் செலுத்துகிறீர்கள்.

என்று நீங்கள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைக்கு ஒரு முடிவு எடுக்குரீர்களோ அன்று தான் முறையான ஜனநாயகம் மலரும்

உங்களது மக்களவை உறுப்பினரோ அல்லது சட்டபேரவை உறுப்பினரோ பற்றி யோசித்து பாருங்கள்

இப்பொழு நீங்கள் யோசித்து பார்த்தால் எத்தனை விழுக்காடு வாக்கு பதிவாகி உள்ளது அது மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் வெற்றி பெற்றவர் பெற்ற வாக்கு எத்தனை சதவீதம் அவர் மொத்த மக்கள்தொகை வாக்குகளில் 51 சதவீதத்தை பெற்று இருக்கிறாரா என்று பார்த்தால் நிறைய பேர் அப்படி இல்லை என்று அறியலாம் பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க மட்டும் மொத்த உறுப்பினர்களில் 50 சதம் வேண்டுமாம் அனால் ஒரு தொகுதியின் மொத்த மக்கள் தொகையில் 50 சதம் இல்லை என்றாலும் பதிவான வாக்குகளில் 50 சதம் கூட இல்லை என்றாலும் [ அதாவது பதிவான வாக்குகளில் அதிகமான வாக்குகள் பெற்றால் போதுமாம் ] அவர் அந்த தொகுதியின் மக்கள் சார்பான உறுப்பினராம்... இதற்காக ஒவ்வொரு குடிமகனும் யோசிக்க வேண்டும் இந்த அமைப்பை மாற்ற சட்டம் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். தேர்தல் என்றாலே ஏதோ அதிகார வர்க்கத்திற்கு மட்டும் சம்பந்தமான விஷயம் என்று சாதரண மக்கள் ஒதுங்கி விடுகின்றனர் நீங்கள் அதிகமாக ஒன்றும் செய்ய வேண்டம் உங்களது வாக்கை மட்டும் செலுத்துங்கள் போதும்.

போர் முறையும் அதன் முடிவும்

நாம் பார்த்த போராட்டங்கள் எல்லாம் அவரவர் சொந்த விஷயம் என்று வரும் பொழுது போராட்டத்தை விட்டுவிட்டு சொந்த வேலையை பார்த்து செல்வது தான். அப்படியும் இல்லை என்றால் சிறைச்சாலை போவோம் என்றாலோ அல்லது உயிர் போய்விடும் என்றாலோ போராட்டம் முடிவுக்கு வந்து விடும். இப்படியான போராட்டங்களுக்கு நடுவே மிகச்சில பேர் உண்மையான போராளிகளாக இருப்பார்கள். அப்படித்தான் இலங்கை மண்ணிலும் தான் இலக்காக நிர்ணயித்த போராட்டத்தில் அதை அடைய வில்லை என்றாலும் தன் உயிரையோ அல்லது தனது மகனது உயிரையோ முக்கியம் என்று கருதாமல் இறுதி வரை போராடி தன் இன்னுயிரை இழந்த ஓர் உன்னதமான போராளி வேலுப்பிள்ளை பிரபாகரன். இதைப்போல் தன்னுடைய முயிற்சிக்காக உயிரைக்கூட இழக்கும் தலைவர்களை உருவாக்குவோம் அல்லது அப்படியான தலைவர்களை தேர்ந்து எடுப்போம். இங்கே நன்றாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் பல உயிர்களை பலி வாங்கி விட்டு இப்போது வாழ்க்கை சீரமைப்பிற்காக அரசாங்கம் பண உதவியை வழங்குகிறது. இதேப்போல் அரசாங்கத்தில் உள்ளவர்களையும் நடத்தினால் எப்படி குமுறுவார்கள் [ குமுறுகிறார்கள் ] ஒட்டு போடுவோருக்கு ஒரு நியாயம் ஆட்சியில் இருப்போருக்கு ஒரு நியாயம். அவர்களை சொல்லி குற்றம் இல்லை ஒட்டு போடும் நம்மைத்தான் சொல்ல வேண்டும்.

வாக்களிக்கும் வாக்கற்றவனே

ஒரு வேலை வயித்துக்கு கஞ்சி கிடைத்தால் போதும் என்று வாக்களிக்கும் கூட்டத்தால் தான் இன்று நமது நிலை இப்படி இருக்கிறது. அடப்பாவிகளா உங்களது ஒட்டு தானடா கோடி கோடியாய் சம்பாதிக்க வழி வகுக்கிறது உன் தலையிலும் மண்ணை வாரி போட்டுக்கொண்டு உன் இனத்தின் தலையிலும் மண்ணை போடுராயடா... உறவுகளுக்காக உயிர் வாழும் தமிழினமே உறவையும் உயிரையும் இனத்திற்காக கொடுத்த வேலுப்பிள்ளை பிரபாகரனுக்காக என்ன செய்ய போகிறாய்....

இப்படிக்கு

இரா சிவஞானம்

Tuesday, May 26, 2009


என்னைப்பற்றி சில வரிகள்